முன்னதாக பராசக்தி காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. எம். எஸ். ஆர் ரோடு, சின்னக்கடை வீதி உள்ளிட்ட வீதிகள் வழியாக பால்குட ஊர்வலம் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. அப்போது காந்தி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பால்குடம் சுமந்து வந்த பெண்கள் குடம் குடமாக விஜயகாந்த் திருவுருப்படத்திற்கு வரிசையாக பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் நகர தேமுதிக சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நகர ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.