அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நலன் கருதி புதிதாக கட்டப்பட்டுள்ள காத்திருப்பு அறையை வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் வசதிக்காக இந்த புதிய அறை கட்டப்பட்டுள்ளது.