இந்த வெடி விபத்தில் கருப்பையா (38), பேச்சியம்மாள் (40), செளன்டம்மாள் (54) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கணேசன் (50) செல்லப்பன் (45) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி குறிப்பில் கூறியது: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரும் ஆழ்ந்த இரங்கலையும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.