இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி வாயிலில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை கல்லூரி மாணவிகளுக்கு விநியோகம் செய்தனர். மேலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசி உள்ளதாகவும் எந்த சூழலிலும் தைரியமாக இருக்க வேண்டும் எனவும் விஜய் அண்ணா கூடவே இருப்பார் எனவும் உறுதியளித்தனர். இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி