குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

அருப்புக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் ஆலயத்தில், மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பிரவேசிக்கும் குரு பகவானின் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, ஆலயத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும், நவகிரக சன்னதியில் வீற்றிருக்கும் குரு பகவானுக்கும் 11 வகையான வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி