விருதுநகர்: இவருக்கு இடையே முதல் ஒருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வீரசிவா வயது (27). இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. 

அவர் மனைவியைத் திட்டிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டுக்காரரான கண்ணன் என்பவரின் தாய் வீரசிவாவைத் திட்டியதாகவும், அதற்குப் பதிலாக வீரசிவா அந்த அம்மாவைத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கண்ணனுக்கும் வீரசிவாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணன் தாக்கியதில் வீரசிவா காயமடைந்துள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து வீரசிவா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி