விருதுநகர்: கடன் உதவியை வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.55 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 50 நெசவாளர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 25 இலட்சம் மதிப்பிலான முத்ரா கடனுதவிகளையும் என மொத்தம் ரூ. 1.80 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.பின்னர், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:

மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களான பேனா நிப், தீப்பெட்டி, திண்பண்டங்கள், பட்டாசு, பருத்தி சார்ந்த தொழில்களும், விவசாயம் சார்ந்த பொருட்களின் வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் வணிகங்கள், செழிப்புற்று வளர உகந்த பகுதியாக இருக்கிறது. இங்கு நிறைய படித்த இளைஞர்கள் உள்ளனர், அவர்கள் பொருளாதாரத்தை பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி