தொழில்நுட்ப உதவியாளர் தற்காலிகப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதிகள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), வேளாண்மை, சுற்றுச்சூழல், வனவிலங்கு உயிரியல், உயிரியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஆகிய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் எனவும், இந்த தேர்வு முறையானது முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பிப்பதற்கு 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்காலமானது 10 மாதங்கள் ஆகும். ஒரு காலிபணியிடம் மட்டும் உள்ளது. மாத சம்பளம் ரூ. 20, 000/- ஆகும்.
விண்ணப்பங்களை climatechangemission. vnr@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி