விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சேர்ந்த வீரண்ணன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் பாளையம்பட்டி அரண்மனை தெருவில் சென்று கொண்டிருந்தபோது முனியசாமி என்பவர் ஓட்டி வந்த டாட்டா ஏசி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து வீரண்ணன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வீரண்ணன் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.