அருப்புக்கோட்டை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் ஒவ்வொரு வீடாகச் சென்று திமுக அரசின் திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர்ந்துள்ளதா என்பதை கேட்டு அறிந்து தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 5 அஜீஸ் நகர் பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். 

இதில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மக்களைச் சந்தித்து திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி எப்போதும் திமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி