விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி காமராஜர் நகர் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் மாபெரும் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராம் பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்த மின்னொளி கபடி போட்டியை அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார் மாநில அளவில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் பெண்கள் அணிகள் போட்டிகளில் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கபடி அணி வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வயது பல்வேறு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது. பெண்கள் அணி போட்டிகள் முடிந்ததும் அவர்களுக்கு நாளை பரிசுகள் வழங்கப்பட உள்ளது அதனைத் தொடர்ந்து ஆண்கள் அணி போட்டிகள் துவங்க உள்ளது. இந்த போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ 51, 000 இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ 30, 000 lஎன பரிசுகள் வழங்கப்பட உள்ளது கபடி போட்டிகள் துவக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.