விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஒற்றை காட்டு யானை புகுந்து மா, தென்னை, பலா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. திருவண்ணாமலை பந்தப்பாறை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பகல் நேரத்திலேயே யானை முகாமிட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.