அருப்புக்கோட்டை: ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கல்யாண வைபவம்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் வைகாசி வசந்த விழாவை முன்னிட்டு ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட வேணுகோபால சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி வசந்த விழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. உற்சவர் அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா உடன் திருமணக்கோலத்தில் கோவிலில் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க வேணுகோபால சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. விழா முடிந்து வேணுகோபால சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோவிலிங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி