தமிழ்நாடு அரசின் மூலம், உயர்கல்விக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நமது மாவட்டத்தில் 12ஆம் வகுப்பில் நன்றாக படித்து முடித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சமூகம், பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் உள்ளார்களா என்று ஆய்வு செய்து பார்த்தால், பெரும்பாலும் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிறந்த நிலைமையில் இல்லை என்றும், சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்களில் சிலர் நல்ல நிலைமையில் இருப்பது என்பதும் தெரிய வருகிறது. ஒரு சாதாரண மாணவன் தனது கல்லூரியில் இளநிலை படிப்பை படித்து விட்டு, மேற்படிப்பு படிப்பதற்கான தகவல்களையும், தேடுதல்களையும், ஒரு சிலரிடம் கேட்டு வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வுகளையும், வழிமுறைகளை பின்பற்றியதால் தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்று நல்ல நிறுவனத்தில் பணி பெற்றுக்கூடிய உதாரணத்தையும் பார்க்க முடிகிறது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?