அருப்புக்கோட்டை: விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் மற்றும் ஒன்றிய திமுக சார்பில் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ் தலைமையில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் மற்றும் ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் திரு‌உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்படி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காந்திநகர் பகுதியில் விளையாட்டு மேம்பாட்டு அணி‌ மாவட்ட அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ் தலைமையில் கருணாநிதியின் திரு உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி