விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவிலில், மகா விஷ்ணுவுக்குரிய விஷ்ணுபதி புண்ணிய காலம் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, பழங்கள், அவல், பொரி, கல்கண்டு படைத்து நெய்வேத்தியம் காண்பிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.