ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலஆலயத்தில்சிறப்புஅபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்த ஆலயத்தில், வைகாசி மாதம் முதல் தேதி அன்று, சன்னதியில் வீற்றிருக்கும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. எண்ணெய் காப்பு சாற்றி, மஞ்சள், பால், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், 63 நாயன்மார்களுக்கு புதிய வஸ்திரங்கள், மலர்மாலைகள் சாற்றி அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் சொக்கநாதர் மற்றும் மீனாட்சி அம்மன் சுவாமிகளுக்கும், ஸ்ரீ சோமாஸ்கந்தர் சன்னதியில் உள்ள சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி