சாத்தூர்: மூதாட்டி, சிறுமி உட்பட 3 பேர் மாயம்

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை வி. மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சூரிய பிரபாகரன் மனைவி கார்த்தி ஈஸ்வரி (23) மற்றும் மகள் காவியா ஸ்ரீ (7) ஆகியோர் மே 28 பகலில் வீட்டில் இருந்து மாயமாகினர். இதேபோல், மடத்துப்பட்டியைச் சேர்ந்த வெங்கிடசாமி மனைவி கவுசல்யா (85) என்ற மூதாட்டியும் வீட்டில் இருந்து காணாமல் போனார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி