விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொப்புசித்தம்பட்டியில் உள்ள மழை நீர் வரத்து கால்வாய் ஓடை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. குடியிருப்புகளில் இருந்து செல்லும் கழிவுநீரும் இதில் கலப்பதால், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், இந்த ஓடையை உடனடியாக சுத்தம் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.