விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா அரசு மருத்துவமனையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பிஎம் கேர் திட்டத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டது. இந்த மையம் திறக்கப்பட்டதிலிருந்து எந்தவித பராமரிப்பும் மேற்கொள்ளப்படாமல் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.