அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் சாலையில் இருந்து முஸ்லிம் தெருவிற்கு செல்லும் முஸ்லிம் கிழக்கு தெரு பகுதியில், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி காணப்படுகிறது. குடியிருப்புகள் அதிகம் உள்ள வீதியில் கழிவு நீர் வீதிகளில் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகள் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை முழுமையாக சுத்தம் செய்து கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.