இந்நிலையில் பாளையம்பட்டி ஊராட்சி பகுதியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைத்தால் வீட்டு வரி உயரும், 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும், பத்திரப்பதிவு கட்டணம் பல மடங்கு உயரும் என புகார் தெரிவித்து பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்னால் குவிந்தனர். மேலும் பாளையம்பட்டி பகுதியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி