விருதுநகர்: இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவருடைய மனைவி ரஞ்சிதம். மருதுபாண்டி இருசக்கர பழுது பார்க்கும் நிலையம் வைத்திருப்பதாகவும், இவர் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த காரை முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சக்திவேல் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் மருதுபாண்டி காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மருதுபாண்டியின் மனைவி ரஞ்சிதம் அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி