அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 2,15,97,540 செலவில், சிவகாசி மாநகராட்சி உட்பட மொத்தம் 2,639 தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி உணவு வழங்கப்படும். முதலமைச்சர் உத்தரவின்படி, பணிக்குச் செல்லும் சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட வேண்டும். நகராட்சி ஆணையாளர் இத்திட்டம் சரியாக இயங்குகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். உணவு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பணிக்குச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.