அமைச்சர் கேகே எஸ் எஸ் ஆர் ஆர் ராமசந்திரன் பேச்சு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ் சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதாகத் தெரிவித்தார். இன்றைய போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் 'நான் முதல்வன்' திட்டம் போன்ற வழிகளில் திறமையை வளர்த்துக்கொண்டால், படித்து முடித்தவுடன் நல்ல வேலை கிடைத்து, குடும்பக் கஷ்டங்களைத் தீர்க்கலாம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி