விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்கக் கூடாது என்பது மறைந்த முதல்வர் கலைஞரின் கனவு என்றும், அதை அவரது மகன் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். இதற்காக தமிழக அரசு ஒவ்வொரு குடிசைக்கும் ரூ. 3.5 லட்சம் ரூபாய் வழங்குகிறது என்றும், கான்கிரீட் வீடு இருந்தால் தான் தற்போது மரியாதை என்றும், அந்த மரியாதையை முதல்வர் மு.க. ஸ்டாலின் உங்களுக்கு செய்துள்ளார் என்றும் அவர் கூறினார்.