கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய அமைச்சர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 100 பயனாளிகளுக்கு பணி உத்தரவை வழங்கினார். மேலும், கட்டுமான தொழிலாளர்கள் 5 பேருக்கும் வீடு கட்டும் உத்தரவை அமைச்சர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி