சிறப்பு தீவிர திருத்த முகாமை அமைச்சர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தல்குடி ஆரம்பப்பள்ளியில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பாக, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதையும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதையும் எளிதாக்குவதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இந்த சிறப்பு முகாம்களை ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி