இந்நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட துவங்கியுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய அலுவலகத்தின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்.
மேலும் புதிய கட்டிடத்தை பார்வையிட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 23 பயனாளிகளுக்கு இ-பட்டா நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் வருவாய் துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.