விருதுநகர்: உறங்கிய பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில், வீட்டின் வாசல் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த சண்முக சுந்தரம் மனைவி ஸ்ரீதேவி (45) மற்றும் அவரது தம்பி பாண்டியராஜன் மனைவி சாந்தி (42) ஆகிய இரு பெண்கள் மீது மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் காயமடைந்த பெண்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி