விருதுநகர்: தபால் நிலையத்தில் பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சூலக்கரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் அமர்நாத் (38). சிவகாசி தலைமை தபால் அலுவலகத்தில் போஸ்டல் அசிஸ்டெண்டாக பணிபுரிந்த அமர்நாத் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற பணியாக பணிபுரிந்த போது கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி அஞ்சல் பணம் ரூ.5,00,000/-ஐ அவரது தனிநபர் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வரவு வைத்து முறைகேடு செய்துள்ளார் என கிடைத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கணினி வழி குற்றப்பிரிவு குற்ற எண். 13/2024 பிரிவு தலைமறைவாக இருந்த அமர்நாத்தை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்பேரில், மாவட்ட கணினிவழி குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மீனா, சார்பு ஆய்வாளர் பாரதிராஜா, காவலர் பொன்பாண்டி ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

அமர்நாத் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அருகாமையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை விரைந்து சென்று அங்கிருந்த அமர்நாத்தை கைது செய்தனர். அமர்நாத் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

தொடர்புடைய செய்தி