ஆனால் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகார் அடிப்படையில் குற்றப் பிரிவு போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை துவக்கினார். அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் செங்கோட்டை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகவேலன்(50) என்பது தெரிய வந்தது.
இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் ஆறுமுகவேலனுக்கு நிறைய கடன் பிரச்சினை இருந்ததாகவும் கையில் சுத்தமாக பணம் இல்லை என்பதால் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.