அருப்புக்கோட்டையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். வரும் சட்டமன்ற தேர்தலை மிக முக்கியமான தேர்தலாக கருதுவதாகவும், 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த திமுக 505 வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் அதில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றிவிட்டு மற்ற அனைத்தையும் கைவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.