காரியாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (மே 20) காலை முதல் நிலவிய கடும் வெயிலுக்குப் பிறகு, மாலை நேரத்தில் திடீரென வானிலை மாறி கருமேகங்கள் சூழ்ந்தன. காரியாபட்டி, ஆவியூர், கல்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி