விருதுநகர்: கைதியை தப்ப விட்டா காவலர்கள் பணியிடை நீக்கம்

அருப்புக்கோட்டை பந்தல்குடி காவல்நிலைய திருட்டு வழக்கில் கைதான பாலமுருகன், கேரள மாநிலம் வையூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை பந்தல்குடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த எஸ்எஸ்ஐ நாகராஜன், போலீசார் ரவி ஜோதி, சுதாகர் ஆகியோர், மீண்டும் சிறையில் அடைக்க காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, இயற்கை உபாதை வருவதாக கூறி தப்பிச் சென்ற கைதியை கண்டுபிடிக்க முடியாததால், காவலர்கள் 3 பேரையும் எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி