விருதுநகர்: இருசக்கர வாகன விபத்து.. மகள்கள் கண்முன்னே தந்தை மரணம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் சோனைமுத்து (41). இவர் மனைவி கற்பகவல்லி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இன்று (ஜூன் 1) திருச்சுழி அருகே உள்ள அம்பனேரி ஊரில் திருவிழாவுக்கு தனது மகள்கள் சுசீந்திரா (13), மதுமிதா (15), அஜிதா (9) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மேலகண்டமங்கலம் என்ற பகுதியில் செல்லும் போது பின்புறம் அடையாளம் தெரியாத லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தந்தை சோனைமுத்து இறந்துவிட்டார். 

மகள்கள் மூன்று பேருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. காயம் பட்ட மகள்கள் மூன்று பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்த சோனைமுத்துவின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி