கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புறவழிச்சாலை சந்திப்புகளில் மின்விளக்குகள், தெரு நாய்கள் தொல்லை கட்டுப்பாடு, நெல் கொள்முதல் நிலைய கண்காணிப்பு, மனுக்களுக்கு உரிய பதில், சாலைப்பணி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார். இதில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி