ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் புதர் மண்டி சேதமடைந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஏன் இவ்வாறு கிடக்கிறது இதை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டியது தானே என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட ஆட்சியர் வரவேற்றபோது ஏன் இந்த விளையாட்டு உபகரணங்கள் இவ்வாறு உள்ளது என கேட்டதற்கு தலைமை ஆசிரியர் தினம்தோறும் சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம் என கூறினார். தினம்தோறும் சுத்தம் செய்வதால் இவ்வளவு அழகாக இருக்கிறதா பரவாயில்லையே என எனக் கூறிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முறையாக சுத்தம் செய்து வைக்குமாறு தலைமை ஆசிரியரை அறிவுறுத்தினார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு