அதன் தொடர்ச்சியாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில் சீமான் கைதை கண்டித்து அக்கட்சியினர் 40க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட சீமானை விடுவிக்க கோரியும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களையும் முழக்கங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.