அருப்புக்கோட்டை: கடைகள் ஏலம் விடுவதில் வாக்குவாதம்

அருப்புக்கோட்டையில், 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் பேருந்து நிலையத்தில் உள்ள 43 கடைகள் இன்று நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுக்கு ஏலம் விடப்பட்டன. ஏற்கனவே 18 ஆண்டுகளாக கடைகள் வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட நிலையில், புதியதாக விண்ணப்பித்திருந்த வியாபாரிகள் தங்களையும் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரூ 7 லட்சம் டி.டி எடுத்து விண்ணப்பித்திருந்த புதிய நபர்கள் ஏலம் நடக்கும் இடத்திற்குள் அனுமதிக்கப்படாததால் தவிப்புக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி