இந்நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை நகர் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரவலான மழை பெய்தது. திடீரென பெய்த மழை காரணமாக அருப்புக்கோட்டை நகர் தொகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பாளையம்பட்டி, பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு