காரியாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் தொடர்மழையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மந்திரிஓடை, செவல்பட்டி, கரிசல்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல்மழை பெய்து, மாலை வேளையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி