காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் லட்சுமணன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் ஜோதிமணி முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் ஆஸ்கார் பிரடி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வாக்காளர் படிவம் சரியாக சென்றடைந்துள்ளதா, இறந்தவர்கள் நீக்கப்பட்டுள்ளார்களா என திமுக, அதிமுகவுக்கு இணையாக தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்றும், வாக்குகளைப் பாதுகாக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி