விருதுநகர் கிழக்கு மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை நகர் மண்டலப் பொறுப்பாளர்களுடன் விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில, மாவட்ட, மண்டல் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தனர். மார்ச் 1ஆம் தேதி நடைபெறவுள்ள பாரதப் பிரதமரின் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அருப்புக்கோட்டையை தீய சக்திகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறச் செய்வது ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டனின் கடமை என வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகளை உற்சாகத்துடன் வழிநடத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டால் தேர்தலில் அருப்புக்கோட்டையை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.