பாளையம்பட்டி: 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகள் வழங்குவதில்லை என புகார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியில் சிலோன் காலனி, காமராஜர் நகர், திருக்குமரன் நகர், வேல்முருகன் காலனி, நெசவாளர் காலனி மற்றும் அதை சுற்றியுள்ள விரிவாக்க பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகள் வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. 

தற்போது பாளையம்பட்டியில் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரிவாக்க பகுதி மக்களுக்கு பணிகள் வழங்காததை கண்டித்து காவேரி, வைகை, கிருஷ்ணா குண்டாறு பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பாளையம்பட்டி ஊராட்சி விரிவாக்க பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பணி வழங்காத ஊராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும் தங்களுக்கு பணி வழங்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி