இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் 7 புரட்சி தின கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ம. ரெட்டியபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சுழி நரிக்குடி ஒன்றிய குழு சார்பில் நவம்பர் 7 அன்று புரட்சி தின கருத்தரங்கம் நடைபெற்றது. லெனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி, கட்சி கொடி ஏற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் சித்தாந்தங்கள், பாலஸ்தீனப் பிரச்சனைகள், உலக மற்றும் இந்திய அளவிலான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி