நகராட்சி பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ. 297.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை பொறியாளர் கணேசன், நிர்வாக பொறியாளர் கற்பகம், நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள்(ஊராட்சி), பேரூராட்சி செயல் அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி