தமிழக வெற்றி கழகம் சார்பில் ரத்ததான முகாம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 108 பேர் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானதையும், கூட்டணி ஆட்சி மூலம் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதையும் கொண்டாடும் விதமாகவும், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடத்தியது. அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில், 108 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக 108 பேர் ரத்ததானம் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி