விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் இன்று மதியம் முதல்வரின் உருவப்படத்தை அரசு மதுபான கடையில் ஒட்ட முயற்சித்ததாக பாஜகவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த மூவரையும் ஊரக காவல் நிலைய போலீசார் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், இந்த மூவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.