அருப்புக்கோட்டை: லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் கைது

பந்தல்குடியைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவருக்கு பேக்கிங் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சங்கரநாராயணன், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்ட சங்கரநாராயணன், பணத்தை வழங்கச் சென்றபோது, ரூ.15,000 லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி (48) விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி